Theme Check

அதிர்ச்சி! நண்பனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன்!!

அதிர்ச்சி! நண்பனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன்!!

அதிர்ச்சி! நண்பனை கடத்தி கொலை செய்த 13 வயது சிறுவன்!!
X

சண்டை போட்டதற்காக 8 வயது சிறுவனை கடத்தி, 13 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகினி பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் தம்பதி தங்கள் 8 வயது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடத்தல் வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையை துவக்கினர்.

முதற்கட்ட விசாரணையில் காணாமல் போன சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவனுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 13 வயது சிறுவனை விசாரித்தபோது பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின.

crime 1

8 வயது சிறுவன் தன்னுடன் சண்டையிட்டதால் அவனை கொலை செய்துவிட்டதாக 13 வயது சிறுவன் கூற, காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை அடுத்து, தனியாக அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டதாக 13 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் செல்போனையும் சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொலை செய்த சிறுவனை கைது செய்து கண்காணிப்பு நிலையத்தில் வைத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it