Theme Check

அதிர்ச்சி! இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!!
X

பீகாரில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.

death

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

nitish

வானிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார். முன்னதாக பீகாரில் கடந்த 17ஆம் தேதி, இடி, மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

newstm.in

Next Story
Share it