Theme Check

அதிர்ச்சி! அக்னிபாத் திட்டத்தால் 2 இளைஞர்கள் தற்கொலை!!

அதிர்ச்சி! அக்னிபாத் திட்டத்தால் 2 இளைஞர்கள் தற்கொலை!!

அதிர்ச்சி! அக்னிபாத் திட்டத்தால் 2 இளைஞர்கள் தற்கொலை!!
X

அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் சேர தயாராகி வந்த 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.. அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராணுவத்திற்குத் தயாராகி வரும் இளைஞர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தில்,ஒரு இராணுவ வீரர் வெறும் 4 வருடங்கள் மட்டுமே இந்திய இராணுவ பணியில் இருக்க முடியும். மேலும் அவர்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின், இராணுவத்தில் வழங்கப்படும் எந்த ஒரு சலுகையும் அவர்களுக்கு வழங்கப்படாது. இதனாலேயே இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

AGNIPATH OPPOSE

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அக்னிபாத் திட்டத்தால், தற்கொலை செய்து கொண்டார். பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த தனஞ்சய் மொஹாந்தி இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தால் தனது ராணுவ கனவு நிராசையானதால் மனமுடைந்த தனஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it