அதிர்ச்சி! ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர் மரணம்! 200 பேர் கவலைக்கிடம்!
அதிர்ச்சி! ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 பேர் மரணம்! 200 பேர் கவலைக்கிடம்!

தலைநகர் டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 25 பேர் மரணமடைந்தனர். மேலும் 200 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்யாவிட்டால், டெல்லியில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம்.
நாடு முழுவதும் கோரத் தாண்டவமாடிவரும் கொரோனா இரண்டாவது தொற்று, தலைநகர் டெல்லியில் ருத்ரதாண்டமெடுத்து பலி வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியிலும், பிற மாநிலங்களிலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாகி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில், குறிப்பாக டெல்லியிலும், குஜராத்திலும் பல நோயாளிகள் கொத்து கொத்தாக மரணத்தை தழுவும் சம்பவங்கள் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன. ஆனால் இந்த மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இல்லை. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மிக குறைந்த அளவான ஆக்சிஜன் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜனை விநியோகிக்க வேண்டும் என்று மாநில அரசை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய அரசின் காலில் விழவும் தயார், டெல்லி மக்களுக்கு ஆக்சிஜனைத் தாருங்கள் என்று கெஜ்ரிவால், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வந்த 25 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்க்கது. டெல்லியில் பல மருத்துவமனைகளில் இன்னும் 12 முதல் 18 மணி நேரத்திற்கு மட்டுமே நோயாளிகளுக்கு தரக் கூடிய அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது மேலும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

