Theme Check

அதிர்ச்சி! சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!!
X

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்திலிருந்து பேருந்தில் உத்தராகண்டிற்கு யாத்திரீகர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றனர். பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டு உத்தரகாசியை அடைந்தனர்.

அப்போது டம்டா எனும் மலைபாங்கான இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பல அடிக்கு கீழே பேருந்து உருண்ட நிலையில் பக்தர்கள் 25 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

uttarakhand-bus-accident

சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஆறு பேரின் சடலங்களை மீட்டனர். எஞ்சிய சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேருந்து விபத்தில் சிக்கியதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து தெரியவந்ததும் உடனடியாக உத்தராகண்ட் புறப்பட்டுச் சென்ற மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it