Theme Check

அதிர்ச்சி! சோமோட்டா அனுப்பிய 3,600 கிலோ கெட்டுப்போன கறி!!

அதிர்ச்சி! சோமோட்டா அனுப்பிய 3,600 கிலோ கெட்டுப்போன கறி!!

அதிர்ச்சி! சோமோட்டா அனுப்பிய 3,600 கிலோ கெட்டுப்போன கறி!!
X

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் சமைப்பதற்காகப் பிரபல பிரியாணி கடை நிறுவனம் ஒன்று ஆர்டர் எடுத்தது. இதற்காக அந்த நிறுவனம் கர்நாடகாவிலிருந்து ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை ஆர்டர் செய்து வரவழைத்தது.

இதையடுத்து கொண்டு வரப்பட்ட இறைச்சிகளை திறந்துபார்த்தபோது அது கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது. இது குறித்து பிரியாணி நிறுவனம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தது.

meat 1

தகவலை அடுத்து அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மூன்றை டன் கெட்டுபோன இறைச்சிகள் இருந்தை உறுதி செய்தனர். பின்னர் அவற்றை மீட்ட அதிகாரிகள் ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு செய்தபோது இறைச்சிகள் கெட்டுப்போனது உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ள அதிகாரிகள், இந்த இறைச்சிகள் சோமோட்டோ மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தையும் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்விற்கும் இறைச்சிகளை அனுப்பியுள்ளதாகவும், எப்படி கெட்டுப்போன இறைச்சி வந்தது என்பதை சோமோட்டோ நிறுவனம்தான் கூறவேண்டும், இது குறித்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it