அதிர்ச்சி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை!!
அதிர்ச்சி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை!!

2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்நகர் மாவட்டம் கவாஜ்பூர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வந்துகொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படை வீரர்கள், தீயை அணைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்த போது ஒரு குடும்பமே ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் பார்த்தபோது வீட்டின் உரிமையாளர் ராம்குமார் யாதவ் (55), அவரது மனைவி கசம் தேவி (52), மகள் மனீஷா (25), மருமகள் சவீதா (27), சவீதாவின் குழந்தை மீனாட்சி (2) ஆகியோர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்குமார் யாதவின் மகன் சுனில் வீட்டில் இல்லாததால் உயிர் பிழைத்துள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கிறதா அல்லது சொத்து தகராறு காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
newstm.in

