அதிர்ச்சி! 11 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்!!
அதிர்ச்சி! 11 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்!!

84 வயது முதியவர் ஒருவர் கொரோனா, ஓமைக்ரான் பீதியில் 11 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டது மருத்துவர்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வரும் 10ஆம் தேதி முதல்தான் முதியோர், இணைநோய் இருப்போர்,முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஆனால், பிகாரின் மதேபுரா மாவட்டம், சாவுசா நகரைச் சேர்ந்த 84 வயது பிரம்மதேவ் மண்டல் என்ற முதியவர் 11 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஒருவருக்கு இரு டோஸ் செலுத்திவிட்டால்,இணைதளத்தில் தானாகவே லாக் செய்துவிடும். அவ்வாறு இருக்கையில் இது எப்படி சாத்தியம் என்று அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தடுப்பூசி மூலம் தனக்கு ஏராளமான பலன் கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார். இடுப்பு வலி, முதுகுவலி இருந்தது அது நின்றுவிட்டது. சளித்தொந்தரவு, இருமல், மூச்சிரைப்பு போன்றவையும் இப்போது இல்லை. அனைத்து மக்களுக்கும் ஏன் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தக்கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதார் எண்ணை மாற்றவில்லை, செல்போன் எண்ணையும் மாற்றவில்லை. ஒவ்வொருமுறையும் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது இதை அளித்துதான் தடுப்பூசி செலுத்தினேன். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. கண்காணிப்பும் இல்லை. இதுவரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில் 12ஆவது டோஸ் செலுத்த ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்ற போது, தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர். இருந்திருந்தால் 12ஆவது டோஸ் செலுத்தியிருப்பேன். செப்டம்பர்மாதத்தில் மட்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசிடம் சரியான கண்காணிப்பு சிஸ்டம் இல்லை, ஆகவே இன்னும் கூட டோஸ்களை எடுத்துக் கொள்வேன் என்றார், அவர் ஒரு அரசு ஊழியர். இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
newstm.in

