அதிர்ச்சி! காதலியை இழந்த சோகத்தில் காதலன் தற்கொலை!!
அதிர்ச்சி! காதலியை இழந்த சோகத்தில் காதலன் தற்கொலை!!

காதலி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் காதலனும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த எழில் (26) என்பவர் தனது உறவுக்கார பெண்ணான மேனகா என்பவரை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்ததார். இந்நிலையில் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால் கடந்த மாதம் காதலி மேனகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காதலன் எழில் உணவகம் நடத்தி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்னைகளால் உணவகத்தை மூடிவிட்டார்.

கடந்த ஒரு மாத காலமாகவே மன உளைச்சலில் இருந்த எழில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

