அதிர்ச்சி! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் புற்றுநோய்!!
அதிர்ச்சி! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் புற்றுநோய்!!

இந்தியாவில், 201ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 22.54 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கடந்த 2018ஆம் ஆண்டு 7,33,139 பேரும், 2019ஆம் ஆண்டு 7,51,517, 2020இல் 7,70,230 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் இலக்கு தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது மூலம் புற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புற்றுநோய் மரணங்களைத் தடுக்க பா.ஜ.க அரசு சரியா நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

