அதிர்ச்சி! தடுப்பூசி செலுத்தாத இளைஞருக்கு செலுத்தியதாக சான்றிதழ்!!
அதிர்ச்சி! தடுப்பூசி செலுத்தாத இளைஞருக்கு செலுத்தியதாக சான்றிதழ்!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தாத நபருக்கு ஊசி செலுத்தியதாக சான்றிதழ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவருக்கு இரண்டாம் டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 2 முதல் 30ஆம் தேதி வரை என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் 2ஆவது டோஸ் போட்டுக் கொள்ளாத நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்தது. அதனை Cowin இணையதளத்திலும் உறுதி செய்துள்ளனர்.

இந்த குழப்பம் குறித்து, சம்பந்தப்பட்ட கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்த போது, தவறுதலாக அப்படி பதிவிடப்பட்டு இருக்கலாம் என்றும், மீண்டும் இந்த மையத்தில் வந்து விபரத்தை சொல்லி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் கேட்ட போது, அப்படி சான்றிதழ் தவறுதலாக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அப்படி வந்திருந்தால் அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
newstm.in

