Theme Check

அதிர்ச்சி! அடகு வைத்த 450 சவரன் நகையை விற்ற கூட்டுறவு சங்கம்!!

அதிர்ச்சி! அடகு வைத்த 450 சவரன் நகையை விற்ற கூட்டுறவு சங்கம்!!

அதிர்ச்சி! அடகு வைத்த 450 சவரன் நகையை விற்ற கூட்டுறவு சங்கம்!!
X

திருவண்ணாமலையில் அடகு வைத்த 450 சவரன் நகையை, கூட்டுறவு தலைவராக உள்ள அதிமுகவை சேர்ந்த மோகன் என்பவர் விற்று 8 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தென்கரும்பலூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுகவைச் சேர்ந்த மோகன் தலைவர் பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இறந்தவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் போலி ரசீது போட்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

tvm

இந்நிலையில் கடனை பெறாத உறுப்பினர்களுக்கு வட்டி கட்ட சொல்லி வங்கியில் இருந்து நோட்டீஸ் சென்றதால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், வங்கியை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளதாகவும், ஆகவே இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

jewel 1

450 சவரன் தங்க நகைகளை வங்கி ஊழியர்கள் தங்களுக்கு தெரியாமல் விற்று விட்டதாகவும், இதற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் பல கோடி ரூபாயை வங்கி ஊழியர்கள் தலைவர் உள்ளிட்டவர்கள் கூட்டாக ஊழல் செய்துள்ளதாகவும் உடனடியாக தமிழக அரசு தங்கள் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கணக்கை அதிகாரிகளை தணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it