Theme Check

அதிர்ச்சி! நேற்று 11,000ஆக இருந்து கொரோனா இன்று 17,000ஆக அதிகரிப்பு!!

அதிர்ச்சி! நேற்று 11,000ஆக இருந்து கொரோனா இன்று 17,000ஆக அதிகரிப்பு!!

அதிர்ச்சி! நேற்று 11,000ஆக இருந்து கொரோனா இன்று 17,000ஆக அதிகரிப்பு!!
X

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 11,739 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 15,940- விட அதிகம் என்பதால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகமாகியுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,7046 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,208 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,87,606 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,250,20 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 197,11,91,329 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it