அதிர்ச்சி! ஷூட்டிங்கில் 3 நடிகைகளுக்கு ஒரே நேரத்தில் கொரோனா!

அதிர்ச்சி! ஷூட்டிங்கில் 3 நடிகைகளுக்கு ஒரே நேரத்தில் கொரோனா!

அதிர்ச்சி! ஷூட்டிங்கில் 3 நடிகைகளுக்கு ஒரே நேரத்தில் கொரோனா!
X

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா, தஸ்னிம் சேக் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் . நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானதும் இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தியிருந்தார். அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அல்பனா புச்சும் நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நடிகைகளுக்கும் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருருப்பது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திவருகிறது.

Tags:
Next Story
Share it