Theme Check

அதிர்ச்சி! 4 நாட்களில் 300 மருத்துவர்களுக்கு கொரோனா!!

அதிர்ச்சி! 4 நாட்களில் 300 மருத்துவர்களுக்கு கொரோனா!!

அதிர்ச்சி! 4 நாட்களில் 300 மருத்துவர்களுக்கு கொரோனா!!
X

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோன 3ஆவது அலையில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸால் நாடு முழுவதும் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவி்ல் கடந்த வாரம் வரை 20,000 பேர் வரை மட்டும் நாள்தோறும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேராக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் எண்ணிக்கையும் 3,000 கடந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.71 லட்சமாக அதிகரித்துள்ளது.

corona doctors

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பின் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒமைக்ரான் இதுவரை 27 மாநிலங்களுக்குப் பரவி 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களில் 50 பேர் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 மருத்துவர்கள் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

Coronavirus-Test-Positive

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும், சொந்தமாக க்ளினிக் வைத்திருக்கும் மருத்துவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it