Theme Check

அதிர்ச்சி! திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை!!

அதிர்ச்சி! திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை!!

அதிர்ச்சி! திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை!!
X

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாத்தில் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெம்மேலி திப்பியக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (31) – அஜிதாவுக்கு (26) 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை உயிரிழந்த நிலையில், பிரபாகரன் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

மகேஷ்வரி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பிரபாகரனின் தாய் மகேஷ்வரி வேலைக்கு சென்ற நிலையில், அவரது உறவினர் பிரபாகரனை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் பிரபாகர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். அவரது அருகில் அஜிதா விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர், உடனடியாக பாப்பாநாடு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

hang

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், திருமணமான 5 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it