Theme Check

அதிர்ச்சி! ஒமைக்ரான் பரவலால் மீண்டும் ஊரடங்கு!!

அதிர்ச்சி! ஒமைக்ரான் பரவலால் மீண்டும் ஊரடங்கு!!

அதிர்ச்சி! ஒமைக்ரான் பரவலால் மீண்டும் ஊரடங்கு!!
X

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவின் திரிபான ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட பலநாடுகள் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வருகின்றன.

அதுமட்டுமல்லாது, டிசம்பர் மாத இறுதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் காரணமாக ஓமைக்ரான் பரவல் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளுக்கு பெரிதாக உள்ளது. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருவதாகவும், எனவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

lock

இந்த உத்தரவு காரணமாக ஜனவரி 14 வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்றும், பள்ளிகளும் குறைந்தது ஜனவரி 9 வரை மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் மக்கள் தங்கள் வீட்டில் விருந்தினர்களை எண்ணிக்கை குறைத்துக்கொள்ள மார்க் ரூட்டே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

Next Story
Share it