அதிர்ச்சி! அலட்சியம் வேண்டாம்! தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா!
அதிர்ச்சி! அலட்சியம் வேண்டாம்! தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு சில வாரங்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், மற்றவர்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக பரவல் இவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அலட்சியம் காட்டாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

