அதிர்ச்சி! கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர் தற்கொலை! விபரீதமாகும் சூழல்!
அதிர்ச்சி! கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர் தற்கொலை! விபரீதமாகும் சூழல்!

தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் மிகக்கடுமையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே மேலும் ஒரு வாரத்திற்கு அங்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள பத்ரா எனும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவேக் ராய் என்ற மருத்துவர் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார்.

தினமும் அதிகரித்த கொரோனா எண்ணிக்கை, அதனால் ஏற்பட்ட வேலை பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர். இந்நிலையில் அவரது மறைவு சக மருத்துவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

