Theme Check

அதிர்ச்சி! பொறியியல் மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!

அதிர்ச்சி! பொறியியல் மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!

அதிர்ச்சி! பொறியியல் மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!
X

சென்னையை அடுத்த ஆவடியில் பொறியியல் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீராபுரம் கிரிஜா நகரைச் சேர்ந்த பிரதீப் (21) என்பவர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவியை அடிக்கடி மிரட்டி வெளியே அழைத்துச் சென்று, பிரதீப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே தாய் மற்றும் தம்பியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

avadi rape

இதனால் கல்லூரி மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து மன உளைச்சல் அடைந்த மாணவி, இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it