Theme Check

அதிர்ச்சி! ரூ.15 லட்சம் மதிப்பிலான போலி பொம்மைகள் பறிமுதல்!!

அதிர்ச்சி! ரூ.15 லட்சம் மதிப்பிலான போலி பொம்மைகள் பறிமுதல்!!

அதிர்ச்சி! ரூ.15 லட்சம் மதிப்பிலான போலி பொம்மைகள் பறிமுதல்!!
X

சென்னையில் குழந்தைகள் விளையாடுவதற்கு விற்கப்பட்டு வந்த தரமற்ற 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஹெம்லேஸ் (Hemlays) என்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொம்மைகளை விற்பனை செய்து வரும் கடையில் இந்திய அரசால் தரச்சான்றிதழ் கொடுக்கப்படாத பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொம்மைகள் விற்கப்பட்டு வருவதாக BIS அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குழந்தைகள் அதிகமாக வாங்கிச் செல்லும் பொம்மைகள் தரமற்றதாகவும், மேலும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருப்பதை கண்டறிந்தனர்.

hamleys 1

குறிப்பாக ஸ்டஃப் செய்யப்பட்ட பொம்மைகள், ட்ரோன்கள், எலக்ட்ரிக்கல் பொம்மைகள் மற்றும் எலக்ட்ரிகல் அல்லாத பொம்மைகள் என பலவகை பொம்மைகள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருந்ததும் அவை அதிக அளவில் விற்பனையாகி வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து தரமற்ற மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 630 பொம்மைகளை BIS அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

hamleys

மேலும் BIS- சென்னை அலுவலகத்தின் தலைமை அதிகாரி பவானி இந்திய தரக்கட்டுப்பாட்டு நிர்ணயம் முத்திரை இல்லாத பொம்மைகள் ஆபத்தானது எனவும் இதனை தயாரிப்பவர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it