Theme Check

அதிர்ச்சி! குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் உயிரிழப்பு!!
X

குடும்பக் கட்டுபாடு செய்த போது தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாகக் கூறி உறவினர்கள் சார் ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையனூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கு பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக் கிழமை குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் சூர்யா மயக்கம் தெளியாமல் இருந்துள்ளார்.

சூர்யாவின் கணவர் சென்று பார்த்த போது எந்த அசைவுமின்றி அவர் படுத்திருந்ததால் செவிலியர்களிடம் கேட்டுள்ளார்.கூடுதலாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகவும், மயக்கம் தெரிந்துவிடும் எனக்கூறி, ஒப்புதல் கையெழுத்திடச் சொன்னதாக கூறப்படுகிறது.

dmp

அதற்கு சூர்யாவின் கணவர் மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து சூர்யா மயக்கம் தெரியாத நிலையில், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, இறந்த சூர்யாவின் உடலை வாங்காமல் இருந்தனர். அப்போது விசாரணைக்கு வந்த சார் ஆட்சியர் சித்ராவின் காரை முற்றுகையிட்டனர்.

dmp

பின்னர் உறவினர்களிடம் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து சூர்யாவின் குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என சூர்யாவின் கணவர் கோவிந்தராஜ், தமிழ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

Next Story
Share it