Theme Check

அதிர்ச்சி! எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை!!

அதிர்ச்சி! எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை!!

அதிர்ச்சி! எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை!!
X

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன்(43) என்பவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக அவரது நிலத்தில் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.

dmp

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாலவாடி அருகே ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் கணேசன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் போராட்டம் நடந்த இடத்திலிருந்து கணேசன் தனது நிலத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

dmp

இது தொடர்பாக தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். இறந்த விவசாயியின் உடலை பாலவாடி அருகே சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை எடுத்து சென்று தருமபுரி இண்டூர் ரோட்டில் செக்காரப்பட்டியில் வைத்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Next Story
Share it