Theme Check

அதிர்ச்சி! மகளையும் பேத்தியையும் பலாத்காரம் செய்த தகப்பன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதிர்ச்சி! மகளையும் பேத்தியையும் பலாத்காரம் செய்த தகப்பன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதிர்ச்சி! மகளையும் பேத்தியையும் பலாத்காரம் செய்த தகப்பன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
X

பெண் ஒருவர் மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தான் 15 வயதாக இருக்கும் போதிலிருந்தே தனது தந்தை தனக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக தனது தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார்.

அதன் பின்னர் தனக்கு திருமணம் ஆன போதிலும் கூட தனது தந்தையின் சித்ரவதை தொடர்ந்து கொண்டிருந்ததாகவும், இதனை யாரிடமாவது கூறினால் தன்னுடைய மகளை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தனது அண்டை வீட்டாரிடம் மட்டும் தனக்கு நடந்து கொண்டிருந்த கொடுமைகளை பற்றி கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு அப்பெண்ணின் மைனர் வயது மகளை, அவருடைய தாத்தா பாலியல் வன்புணர்வு செய்தார். இந்த தகவலை அவரின் தாயாரிடம் சிறுமி சொன்ன போது அப்பெண் அதிர்ந்து போனார். உடனே தனக்கு தனது தந்தை அளித்த கொடூரம் தனது மகள் அனுபவிப்பதை அறிந்து உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

அப்பெண்ணின் 65 வயது தந்தை மீதானவழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு போஸ்கோ நிதிமன்ற நீதிபதி பந்தரே அனைத்து ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக தீர்பளித்தார். இதனையடுத்து மேலும் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அளித்ததோடு மகளுக்கு 50,000 ரூபாயும், பேத்திக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தொகை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it