Theme Check

அதிர்ச்சி! நண்பர்களால் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை!!

அதிர்ச்சி! நண்பர்களால் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை!!

அதிர்ச்சி! நண்பர்களால் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை!!
X

கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகமாபுதூரை சேர்ந்த சரவணன்(19) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் சரவணன், அன்னூர் கோவை சாலையில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, கொலையாளிகள் இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சரணடைந்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

annur murder

அதில், கொலையாளிகளில் ஒருவர் அன்னூர் அடுத்த பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(20) என்பதும், அவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.

மற்றொருவர் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன் என்பதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் மூவரும் இந்து முன்னணியில் இருந்து வந்த நிலையில், சரவணன் அந்த அமைப்பில் இருந்து விலகி நிதி நிறுவனம் நடத்தியது தெரியவந்தது. அவர் கடந்த வாரம் திமுகவில் இணைந்த நிலையில், கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

newstm.in

Next Story
Share it