Theme Check

அதிர்ச்சி! ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாத தமிழக அரசு! நீதிமன்றம் கண்டனம்!

அதிர்ச்சி! ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாத தமிழக அரசு! நீதிமன்றம் கண்டனம்!

அதிர்ச்சி! ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாத தமிழக அரசு! நீதிமன்றம் கண்டனம்!
X

2012ம் ஆண்டு தலைநகர் டில்லியில் கல்லூரிமாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் உருவாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் செய்யப்பட்டன. அந்த வகையில் நிர்பயா நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்ட முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

நிர்பயா திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் இதுவரை ரூ.6 கோடி மட்டும் செலவழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியத் தொகை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இந்த நிதியை, 100 சதவீதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும் என பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவிடப்பட்டது? நிர்பயா நிதியை ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it