அதிர்ச்சி! சொத்து தகராறில் பெண் மீது வெந்நீர் ஊற்றிய கொடூரம்!!
அதிர்ச்சி! சொத்து தகராறில் பெண் மீது வெந்நீர் ஊற்றிய கொடூரம்!!

சொத்து தகராறில் கொதிக்க கொதிக்க பெண் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வேம்பனூர் பகுதியை சேர்ந்த அருள்செல்வி, கணவர் செந்தில்குமார் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது கொழுந்தனார் ஜெய்சங்கர் குடும்பத்துக்கும் சொத்து பிரச்னை காரணமாக சண்டை வரும் என தெரிகிறது.
சம்பவத்தன்று அருள்செல்வி கணவரின் அண்ணன் மனைவி பத்மாவதி அவரது மாமனாரிடம் எங்களுக்குள்ள இடத்தை பிரித்துக் கொடுங்கள் நாங்கள் வேலி வைக்க வேண்டும் என்று வீட்டின் பின்புறம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அருள்செல்வி, மாமனாரிடம் பேசி எல்லா இடத்தையும் நீ வாங்க பார்க்கிறாயா என்று அவரது வீட்டு கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது பத்மாவதி தகாத வார்த்தைகளால் திட்டியபடி வெந்நீரை எடுத்து வந்து அருள்செல்வி மீது ஊற்றியுள்ளார்.
இதில் அருள் செல்வியின் வலது கை வலது கால் முதுகு ஆகிய இடங்களில் பலத்ச காயம் ஏற்பட்டது. பத்மாவதியுடன் வந்த ஜெய்சங்கர் அருட்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தோள்பட்டையில் தாக்கியுள்ளார். பத்மாவதியின் அம்மா ஜீவரத்தினம் அருள்செல்வியின் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து குடவாசல் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பத்மாவதி, ஜெய்சங்கர், ஜீவரத்தினம் ஆகியோரை காவல்துறையினர் குற்றவாளிகளாக சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர். இதில் பத்மாவதி மட்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
newstm.in

