Theme Check

அதிர்ச்சி! மனைவியை கொலை செய்து பிணத்துடன் தூங்கிய கணவன்!!

அதிர்ச்சி! மனைவியை கொலை செய்து பிணத்துடன் தூங்கிய கணவன்!!

அதிர்ச்சி! மனைவியை கொலை செய்து பிணத்துடன் தூங்கிய கணவன்!!
X

கடலூரில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் பிணத்துடன் தூங்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு தீபா என்ற மனைவியும், ஐந்து மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கொத்தனார் வேலைசெய்யும் இவர் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரது மனைவி தீபா சண்டையிட்டு உள்ளார். அதுபோல் ஆனந்த் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஆத்திரமடைந்த ஆனந்த் தீபாவை கட்டையால் அடித்துள்ளார்.

cdl

தீபா அப்படியே விழுந்து மயங்கி உயிரிழந்தார். போதையிலிருந்த ஆனந்த் மனைவி இறந்ததுகூட தெரியாமல் இரவு முழுவதும் உடல் அருகிலேயே தூங்கியிருக்கிறார். அவரது குழந்தைகளும் இது தெரியாமல் இருந்துள்ளனர்.

எப்போதும் காலையிலேயே திறந்திருக்கும் வீடு நீண்ட நேரமாகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது தீபா உயிரிழந்து கிடந்ததையும், அருகில் ஆனந்த் தூங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆனந்தை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it