அதிர்ச்சி! சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை!!
அதிர்ச்சி! சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை!!

சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மாலியன் கிராமத்தில், கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த மர்மகும்பல், சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் ஆம்பியனை, தலை மற்றும் மார்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்தனர்.
சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று சந்தீப் நங்கல் அபாரமாக விளையாடி வந்தார்.

சமீபகாலமாக கபடிப் போட்டிகளில் அதிகளவிலான வெற்றிகளின் மூலம் புகழ் அடைந்து வந்தார். கபடி போட்டியில் தனது திறமையால் சாதித்துவந்த நிலையில், கபடி கூட்டமைப்பை ஒன்றையும் நிர்வகித்து வந்தார்.
கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த பிரச்னை காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரிவான விசாரணைக்கு பிறகே காரணம் குறித்த முழு தகவல் தெரியவரும். சந்தீப் நங்கலின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

