Theme Check

அதிர்ச்சி! கடன் தள்ளுபடி கிடையாது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிர்ச்சி! கடன் தள்ளுபடி கிடையாது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிர்ச்சி! கடன் தள்ளுபடி கிடையாது! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
X

கொரோனா காலத்தில், வீட்டு கடனுக்கான தவணை முறையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. வாழ்வின் அடிப்படைப் பொருளாதாரம் கொரோனா கால ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கடன் தவணை செலுத்துவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 6 மாத கடன் தவணை செலுத்துவதில் வழங்கப்பட்ட சலுகையில், பல வங்கிகள், தவணைத் தொகை கட்டாததினால், அசல் தொகைக்கான வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட்டிக்கு வட்டி கட்டுவதில் இருந்து அனைத்து துறைகளுக்கும் தளர்வு வழங்கினால், மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் வங்கிகளின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி நடைப்பெற்ற விசாரணையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில், 'கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை விதிக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியையும் முழுமையாக தள்ளுபடி செய்வது இயலாது என்றும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தால் அப்படி வசூலித்த பணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும், வட்டி தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஊரடங்கு காலத்தில் இருந்து இப்போது தான் பல தொழில்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பு ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் துறை நிறுவனங்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளது.

Tags:
Next Story
Share it