Theme Check

அதிர்ச்சி! திடீரென ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகல்!

அதிர்ச்சி! திடீரென ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகல்!

அதிர்ச்சி! திடீரென ஒலிம்பிக் போட்டியிலிருந்து வடகொரியா விலகல்!
X

சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா காரணமாக விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன . அந்த போட்டிகள் தற்போது ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்டு 24 முதல் செப்டம்பர் 5 வரையும் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது வீரர்களை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை என்கிற அதிரடி முடிவை வடகொரியா அறிவித்துள்ளது. இது குறித்து வடகொரியாவில் மார்ச் 25 ல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இதுவரை கொரோனாவின் பாதிப்பு இல்லை என்ற நிலையில் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் நலனை முன்னிட்டு இந்த வருடம் நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக வடகொரியா அறிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it