அதிர்ச்சி! ஒமைக்ரான் இந்த மாதத்தில் உச்சம் பெறும்!!
அதிர்ச்சி! ஒமைக்ரான் இந்த மாதத்தில் உச்சம் பெறும்!!

ஓமைக்ரான் அலை உலகம் முழுதும் 2 மாதங்களில் 300 கோடி பேரை பாதிக்கும் என மருத்துவ அளவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரன் அலை கடந்த ஏப்ரல் 2021ஆம் ஆண்டில் தொடங்கிய டெல்டா அலை போல் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று மருத்துவ அளவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கிறிஸ்டபர் முரே எச்சரித்துள்ளார்.
டெல்டா வைரஸ் இந்தியாவை முடக்கியது, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்தது, அதே போன்ற ஒரு அதிகரிப்பை கொரோனா ஓமைக்ரான் தொற்றிலும் காணலாம் என்று டாக்டர் கிறிஸ்டபர் முரே எச்சரித்துள்ளார்.

நேற்று 50 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா இன்று 58,097ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 4.18% ஆக அதிகரித்துள்ளது.
இது ஜனவரி மத்தியில் உச்சம் தொட்டு, நாளொன்றுக்கு உலகம் முழுதும் 3 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இது டெல்டா அலையை விட 3 மடங்கு உச்சம்பெறும் அலையாகும். இந்தியாவில் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சம் தொடும்.

அறிகுறியில்லாமலேயே தொற்று ஏற்படும், இதனால் ரிப்போர்ட் ஆகாமலேயே நிறைய கேஸ்கள் இருக்கும். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மரண விகிதமும் குறைவாகவே இருக்கும்” என்று டாக்டர் முரே தெரிவித்துள்ளார்.
டாக்டர் முரே வாஷிங்டன்பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ அளவை மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

