அதிர்ச்சி! கோடையில் மின்தடை அதிகரிக்க வாய்ப்பு!!
அதிர்ச்சி! கோடையில் மின்தடை அதிகரிக்க வாய்ப்பு!!

மின்சாரத் தேவை அதிகரித்து வருவதாலும், நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலங்களில் மின்தடை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மஹாராஷ்டிரா தனது சராசரி மின்தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் உள்ளது.
அங்கே, கட்டாய மின்தடை என்பது தவிர்க்க முடியாதாக உள்ளது. மறுபுறம், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக மின்வெட்டை சந்தித்து வருகின்றன.

குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக விலை கொடுத்து மின்கொள்முதல் செய்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 12ம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களும் பத்து சதவிகிதம் வரை நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், சில மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் நீண்ட தூர நிலக்கரிப் போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக, இணைப்பு நிலக்கரியில் (linkage coal) 25 சதவிகிதம் வரை சுங்கச்சாவடி வசதி (Toiling Facility) அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
newstm.in

