அதிர்ச்சி! கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை!!
அதிர்ச்சி! கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை!!

குடும்பத்தகராறு காரணமாக கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா (23) என்பவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மோகனா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தற்போது மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் மோகனாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகனா மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்த காவல்துறையினர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
newstm.in

