அதிர்ச்சி! தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை!!
அதிர்ச்சி! தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை!!

சென்னையில் தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த சந்தீப் மோகன்(29) என்பவர் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர். கடந்த 16ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையிலேயே தனது அறையில் தனிமைப்படுத்தி கொண்டுார்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையின் செவிலி டீ கொடுப்பதற்காக சந்தீப் மோகன் அறைக்கு சென்ற போது அவர் கையில் ஊசி ஒன்றுடன் சுய நினைவின்றி படுத்து கிடந்தார். மருத்துவர்கள் சந்தீப் மோகனை பரிசோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தீப் மோகனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை என வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சந்தீப் மோகன் அதே மருத்துவமனையில் செவிலியர் ஒருவரை காதலித்து வந்ததும், காதல் விஷயம் மருத்துவமனைக்கு தெரியவந்ததால் இருவரையும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு பணியிலிருந்து நீக்கியது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தீப் மோகன் வேறு மருத்துவமனையிலும், அவரது காதலி துபாயிலும் பணிப்புரிந்து வந்துள்ளனர். மீண்டும் சந்தீப் மோகன் கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள அதே தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சந்தீப் மோகனுக்கு வேறொரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்து வருகிற ஏப்ரல் மாதம் திருமணம் செய்துவைக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தீப் மோகன் அவரது காதலியிடம் காதலை முறித்து கொள்ளலாம் எனக்கூறிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

துபாயில் உள்ள அவரது காதலி திருமணம் செய்யவிருக்கும் பெண்ணிடம் பேசியுள்ளார். இதனால் சந்தீப் மோகன் வீட்டுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படும் சந்தீப் மோகன் தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் இவரது நெருங்கிய நண்பரும் ராயபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவருமான மகேஷ்வரன் என்பவர் மைலாப்பூர் சவேரா ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

