அதிர்ச்சி! தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!!
அதிர்ச்சி! தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!!

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 2 ரூபாய் 27 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 28 காசுகளும் உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடர்வதால், எரிபொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகக் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை நான்கு மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே காரணம் என்றார்.
ஆனாலும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
newstm.in

