அதிர்ச்சி! பெண்ணுக்கு பட்டப்பகலில் சரமாரி கத்திக்குத்து!!
அதிர்ச்சி! பெண்ணுக்கு பட்டப்பகலில் சரமாரி கத்திக்குத்து!!

திருமணமான பெண்ணை ஒருவர் பட்டப்பகலில் சரமாரியாக கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புர்கா அணிந்த பெண்ணை பின்தொர்ந்து சென்ற நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். 48 வயதுடைய அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நீண்ட கத்தியை கொண்டு பெண்ணை பின்னால் இருந்து தாக்கியதை அடுத்து நொடிப்பொழுதில் அப்பெண் நிலைகுலைந்தார்.
அவ்வழியாகச் சென்றவர்களில் ஒருவர் நபரின் அருகில் செல்ல முயன்றபோது, தாக்குதல் நடத்தியவர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை அண்டை வீட்டு நபர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அப்பெண் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

