அதிர்ச்சி! விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு!!
அதிர்ச்சி! விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனச் சோதனையின் போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்தார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதே இதற்குக் காரணமெனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளின் சமாதானத்தைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்காமல் ஊர் திரும்பினர்.
இதையடுத்து மணிகணிடனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

