Theme Check

அதிர்ச்சி! மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை சப்ளை!!

அதிர்ச்சி! மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை சப்ளை!!

அதிர்ச்சி! மெடிக்கல் ஷாப்பில் போதை மாத்திரை சப்ளை!!
X

சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சதாம் உசேனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைநடத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த மருந்தக உரிமையாளர் கோபிநாத் சிங் (40), மருந்து மொத்த விற்பனையாளர் பாண்டுரங்கன் (42), தனியார் நிறுவன சூப்பர்வைசர் சந்தோஷ் (23), மருந்தக ஊழியர் பாலசுப்பிரமணி (54) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

tablets

விசாரணையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வலி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள், ஐந்து செல்போன் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

newstm.in

Next Story
Share it