Theme Check

அதிர்ச்சி! இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!

அதிர்ச்சி! இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!

அதிர்ச்சி! இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!
X

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளம்பெண் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குறவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன் - கண்ணம்மாள் (27) தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வேங்கையன் சென்னையில் மனைவி மற்றும் மகன்களுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறவன்குளத்துக்கு திரும்பி வந்த வேங்கையன், மனைவி கண்ணம்மாளை சமரசம் செய்து தன்னுடன் அழைத்து வந்தார்.

Murder

இந்நிலையில், கண்ணம்மாள் தனது வீட்டின் அருகில் தலை, கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அலங்காநல்லூர் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கண்ணமாளின் கணவர் வேங்கையன் வீட்டில் இருந்து மாயமானது தெரிய வந்தது. இதனால், கண்ணம்மாளின் கொலையில் வேங்கையனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள அவரை 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it