அதிர்ச்சி! மேற்கூரையை துளைத்து வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு!!
அதிர்ச்சி! மேற்கூரையை துளைத்து வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு!!

பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்தில் வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை துளைத்து துப்பாக்கி குண்டு உள்ளே பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுப்ரமணி (60) என்பவரது வீட்டின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டை துளைத்து துப்பாக்கி குண்டு உள்ளே சென்றது. இது அருகிலுள்ள துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தில் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அருகில் உள்ள துப்பாக்கிசுடும் மையத்தில் பயிற்சி நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், அங்கிருந்துதான் துப்பாக்கி குண்டு வந்திருக்குமென பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆய்வு நடத்தினார்.

ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். அந்த இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. துப்பாக்கி குண்டு ரயில்வே போலீஸாருக்கு சொந்தமானது என்று கூறினார்.
முன்னதாக கடந்த மாத இறுதியில் புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இதேபோல வெளியேறிய குண்டு ஒன்று, சிறுவனொருவனின் தலையில் பலமாக தாக்கியிருந்தது.
இதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இச்சம்பவம் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டுமொருமுறை இதேபோல நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
newstm.in

