Theme Check

அதிர்ச்சி! ஒரு ஆன்லைன் மீட்டிங்கில் 900 பேரை வேலையை விட்டு தூக்கிய சிஇஓ!!

அதிர்ச்சி! ஒரு ஆன்லைன் மீட்டிங்கில் 900 பேரை வேலையை விட்டு தூக்கிய சிஇஓ!!

அதிர்ச்சி! ஒரு ஆன்லைன் மீட்டிங்கில் 900 பேரை வேலையை விட்டு தூக்கிய சிஇஓ!!
X

ஒரு ஸூம் காலில், பெட்டர்.காம் நிறுவனத்தின் சி... விஷால் கார்க் (Vishal Garg) 900 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளார்.

பொருட்களை அடமானம் வைத்தல், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு பணியாற்றும் 900 பேருக்கு கடந்த வாரம் ஸூம் கால் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பெட்டர் டாட் காமின் சி... விஷால் கார்க் பேசினார். அப்போது அவர் இந்த போன் காலில் நீங்கள் இருந்தால், நீங்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டவர்களில் ஒருவராக இருப்பீர்கள். உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை' என்று கூறி, அழைப்பை துண்டித்தார்.

vishal garg

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விஷால் கார்க் அளித்துள்ள விளக்கத்தில், 'பொதுவாக நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். கடந்த முறை ஜூம் காலில் பேசி, பணியாளர்களை நீக்கம் செய்தபோது எனக்கு அழுகையே வந்து விட்டது.

நான் வேலையில் இருந்து நீக்கியவர்கள் ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்தார்கள். சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் திருடியுள்ளனர். உற்பத்தியின்மை, செயல் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் நீக்கப்பட்டுள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.

better

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னர், ஏராளமான செய்தி ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதால் பெட்டர் டாட் காமும், அதன் நிறுவனர் விஷால் கார்க்கும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள்.

newstm.in

Next Story
Share it