அதிர்ச்சி! மகளின் காதலனை கொன்றுவிட்டு நாடகமாடிய கொடூர தந்தை!!
அதிர்ச்சி! மகளின் காதலனை கொன்றுவிட்டு நாடகமாடிய கொடூர தந்தை!!

மகளின் காதலனைக் கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாலன் சைமன் என்பவர் தனது மகளின் அறையில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் மகளின் அறையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த இளைஞரை லாலன் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான், அவனைக் கத்தியால் குத்திவிட்டேன் எனத் தெரிவித்தார். போலீஸார் விரைந்து அவரது வீட்டிற்கு வந்தனர்.

உயிரிழந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
உயிரிழந்த இளைஞர் பெயர் அனீஷ் ஜார்ஜ். இவர் திருவனந்தபுரம் கல்லூரியில் படித்து வந்துள்ளார். லாலன் சைமனின் மகளை அனீஷ் ஜார்ஜ் காதலித்து வந்துள்ளார். இதற்கு லாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று காதலியைச் சந்திப்பதற்காக அனீஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது மகளின் காதலன் அனீஷ் ஜார்ஜை கொலை செய்துவிட்டு திருடன் என லாலன் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து லாலன் சைமனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதலனைக் கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

