Theme Check

அதிர்ச்சி! தாயை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற மகள்!!

அதிர்ச்சி! தாயை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற மகள்!!

அதிர்ச்சி! தாயை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற மகள்!!
X

சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாயையே மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அர்ச்சனா ரெட்டி என்ற பெண்ணுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் சேர்ந்தே இருவரும் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அர்ச்சனா கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

blr murder

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அர்ச்சனாவை அவரது மகள் யுவிகா ரெட்டியும் இரண்டாவது கணவர் நவீன்குமாரும் சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அர்ச்சனா தன்னைவிட பத்து வயது இளையவரான நவீன்குமார் என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து நவீன்குமாருக்கும், முதல் கணவருக்குப் பிறந்த யுவிகா ரெட்டிக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இரண்டு பேரையும் அர்ச்சனா கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களின் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர்களின் செலவுகளுக்கான பணத்தை நிறுத்தியுள்ளார்.

murder

இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமாரும், மகள் யுவிகா ரெட்டியும் சேர்ந்து அர்ச்சனாவை கொலை செய்ய திட்டமிட்டனர். இருவரும் நண்பர்கள் உதவியுடன் அர்ச்சனா ரெட்டியை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நவீன்குமார், யுவிகா ரெட்டி உட்பட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it