அதிர்ச்சி! போலீஸை தாக்கிய கள்ளச்சாராய கும்பல்!!
அதிர்ச்சி! போலீஸை தாக்கிய கள்ளச்சாராய கும்பல்!!

ஆந்திராவில் சோதனை நடத்திய போலீஸை கள்ளச்சாராய கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்குட்பட்ட ஆலமூர் பகுதியில் உள்ள ஆற்றைப் பயன்படுத்தி சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படகு ஒன்று வந்தது. அதை சோதனை செய்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட பீப்பாய்களில் கள்ளச்சாராயம் இருந்தது.

இதையடுத்து போலீஸார் அதைப் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது படகில் இருந்த கும்பல் திடீரென போலீஸார் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பம் தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் கள்ளச்சாராயம் காய்ச்சி படகில் எடுத்து வந்த 6 பேரை கைது செய்தனர்.
newstm.in

