Theme Check

அதிர்ச்சி! கடத்தல் மாடுகளை லாரியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்!!

அதிர்ச்சி! கடத்தல் மாடுகளை லாரியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்!!

அதிர்ச்சி! கடத்தல் மாடுகளை லாரியில் இருந்து தூக்கி வீசிய கும்பல்!!
X

கடத்தல் கும்பல் ஒன்று போலீஸ் துரத்தியதால் மாடுகளை லாரியில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் கடத்தல்காரர்கள் பசுக்களை கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. டிரக் ஒன்றில் ஏழு மாடுகள் கடத்தப்படுவதாக தகவக் வந்துள்ளது.

இதையடுத்து புகார் அளிக்கப்பட்ட டிரக்கை காவல்துறையினர் நெருங்கியதும் அது வேகமெடுக்க தொடங்கியது. காவல்துறையினரின் கார்களை இடித்து கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

cow

அதன் ஒரு பகுதியாக ஓடும் வாகனத்திலிருந்து மாடுகளை வெளியே வீசத் தொடங்கினர். அதிவேக துரத்தலுக்கு பிறகு 22 கிமீ பயணித்து மாடு கடத்துபவர்கள் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பசுக்களைக் கடத்தியதாகவும், பசு காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஐந்து பேரை கைது செய்தனர். பசுக் கடத்தல்காரர்களிடமிருந்து சில நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

cow

யஹ்யா, பல்லு, தஸ்லீம், காலித் மற்றும் சாஹித் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நோக்கத்திற்காக பசுவை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it