அதிர்ச்சி! 125 பாம்புகளுக்கு மத்தியில் இறந்து கிடந்த நபர்!!
அதிர்ச்சி! 125 பாம்புகளுக்கு மத்தியில் இறந்து கிடந்த நபர்!!

அமெரிக்காவின் மேரிலாந்தில் சார்லஸ் கவுண்டி என்ற பகுதி உள்ள வீடு ஒன்று பூட்டியே இருந்தது. இதனால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அந்த நபர் தரையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது 125 பாம்புகளுக்கு மத்தியில் அந்த நபர் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அனைத்து பாம்புகளையும் போலீஸார் மீட்டனர். இதையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த நபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாம்பு கடித்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். உயிரிழந்தவர் வீட்டிலிருந்து 125 கொடிய விஷள்ள பாம்புகள் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

