அதிர்ச்சி! பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவி!!
அதிர்ச்சி! பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவி!!

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் பட்டியலின மாணவி கழிப்பறையை கழுவும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றும் தினந்தோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம், கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் மாணவி எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நியைில் பள்ளித் தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பாவதியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
newstm.in

