Theme Check

அதிர்ச்சி! அதிகாலை 2 மணிக்கு குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற பெண்!!

அதிர்ச்சி! அதிகாலை 2 மணிக்கு குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற பெண்!!

அதிர்ச்சி! அதிகாலை 2 மணிக்கு குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற பெண்!!
X

கரூரில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலாளி. சக்திவேலுக்கும், சரண்யா என்ற பெண்ணுக்கும் 2015இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கனிஷ்கா (6), புவிஷா (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் சரண்யா கடந்த சில மாதங்களாக தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது.

well 1

இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு 2 பெண் குழந்தைகளுடன் வெளியில் வந்த சரண்யா, கணவருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குழந்தைகளை வீசி தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி சரண்யா மற்றும் 2வது மகளின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

well 1

மேலும், முதல் மகளான கனிஷ்காவின் உடலை தேடி வருகின்றனர்.இது தொடர்பாக பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு யாரேனும் கிணற்றிக் தள்ளி கொலை செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it