அதிர்ச்சி! நாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த இருவர் கைது!!
அதிர்ச்சி! நாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த இருவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டைக் கடித்ததாக கூறி இரண்டு பேர் நாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று ஆட்டை கடித்தாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தாஸ் மற்றும் உடன் இருந்த குமார், இசக்கி முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆட்டை கடித்த நாயைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இவர்கள் நாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நாயைக் கொடூரமாகக் கொலை செய்த தாஸ், இசக்கி முத்து ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

